புத்ராஜெயா,செப்டம்பர் 09-
ஜோகூர், பங்குனம் சுல்தான் இஸ்கந்தர் கட்டடத்தின் சுங்கத்துறை, குடிநுழைவு மற்றும் நோய்தடுப்பு சோதனை சாவடியில் குடிநுழைவுத்துறை அதிகாரி ஒருவருடன் வாய் தகறாற்றில் ஈடுபட்டதற்காக சிங்கப்பூரை சேர்ந்த மாது ஒருவர் 7 நாட்களுக்கு குடிநுழைவு காவலில் வைக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க மலேசிய குடிநுழைவுத்துறை சிறப்புக்குழுவை அமைத்துள்ளது.
குடிநுழைவுத்துறையின் துணை தலைமை இயக்குநர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த சிறப்புக்குழு அமைக்கப்பட்டதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ ரஸ்லின் ஜூசோ தெரிவித்துள்ளார்.
அந்த குடிநுழைவு சோதனை சாவடியில் உண்மையிலேயே என்ன நடந்தது, அந்த சிங்கப்பூர் மாது செய்து குற்றம் யாது, கடமையில் இருந்த குடிநுழைவு அதிகாரி நடப்பு விதிமுறைகளை பின்பற்றினாரா? முதலிய விவரங்கள் ஆராயப்படும் என்று டத்தோ ரஸ்லின் குறிப்பிட்டார்.