தீ விபத்தில் 26 மோட்டார் சைக்கிள்கள் அழிந்தன

Pasir Gudang,செப்டம்பர் 10-

ஜோகூர்,பாசிர் குடாங், ஜாலான் பெகெலிலிங்-கில் உள்ள தொழிற்சாலையின் வாகனம் நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட தீச் சம்பவத்தில் 26 மோட்டார் சைக்கிகள் அழிந்தன.

இச்சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் நிகழ்ந்தன. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு, மீட்புப்படையினர் சுமார் 45 நிமிடத்தில் தீ யை கட்டுப்படுத்தினர்.

தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு சொந்தமான 26 மோட்டார் சைக்கிள்கள் அழிந்ததன் காரணமாக சுமார் 78 ஆயிரம் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS