குவா முசாங் ,செப்டம்பர் 10-
தனது கிராமத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் பறவையை பிடிக்க சென்ற ஆடவர் ஒருவர், கரடியினால் தாக்கப்பட்டு, கடும் காயங்களுக்கு ஆளானார்.
இச்சம்பவம் நேற்று காலை 9 மணியளவில் கிளந்தான், குவா முசாங், ஜெரெக், கம்பங் டாலம் செண்டுக் என்ற இடத்தில் நிகழ்ந்தது. முகமது ஜாக்கி சே என்று அடையாளம் கூறப்பட்ட 33 வயதுடைய ஆடவர், அந்த கொடிய விலங்கினம் கடித்து குதறியதில் தலை, உடல், கால்கள் முதலியவற்றில் கடும் காயம் ஏற்பட்டுள்ளது.
அந்த நபர் தற்போது குவா மூசாங் மருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் தலைவர் முகமது ஜாக்கி சே தெரிவித்தார்.