காஜாங் , செப்டம்பர் 10-
கடந்த சனிக்கிழமை காஜாங்கில் பந்து விளையாடிக்கொண்டு இருந்த 14 வயது இளைஞர் ஒருவர், திடீரென்று மயங்கி விழுந்து மரணமுற்றதாக மாவட்ட போலீஸ் தலைவர் நஸ்ரோன் அப்துல் யூசுப் தெரிவித்தார்.
இரு அணியினருக்கு இடையில் கால்பந்தாட்டம் நடந்து கொண்டு இருந்த போது நிகழ்ந்த இச்சம்பவத்தில் அந்த இளைஞர் அருகில் உள்ள கிளினிக்கிற்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் காஜாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் உயிரிழந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டது என்று நஸ்ரோன் அப்துல் யூசுப் குறிப்பிட்டார்.
அந்த பதின்ம வயதுடைய இளைஞர் ஆஸ்துமா நோயினால் அவதியுற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.