கோலாலம்பூர், செப்டம்பர் 10-
பேரா, லுமூட் கடற்படைத் தளத்தைச் சேர்ந்த முன்னாள் பயிற்சி அதிகாரி காலஞ்சென்ற J. சூசைமாணிக்கத்தின் வயிற்றின் மீது உட்கார்ந்ததாக கூறுப்படும் குற்றச்சாட்டை கடற்படை இராணுவ அதிகாரி ஒருவர், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று மறுத்தார்.
லுமூட். கே.டி.சுலாதன் இட்ரிஸ் கடற்படை முகாமில் அதிகாரிகளுக்கான பயிற்சி அதிகாரி என்ற முறையில் சூசைமாணிக்கத்தின் வயிற்றின் மீது பல முறை தாம் அமர்ந்ததாக கூறப்படுவதை 29 வயது கடற்படை அதிகாரி லேபிடேனான் அப்துல் ஆரிஃ அப்துல் ஹலீம் மறுத்தார்.
தனது மகன் சூசை மாணிக்கம் மரணம் தொடர்பில் அவரது தந்தை S. ஜோசப் தொடுத்துள்ள மானநஷ்ட வழக்கில் அந்த அதிகாரி மேற்கண்டவாறு சாட்சியம் அளித்தார்.
இதனிடையே பேரா, செரி மஞ்சங் மருத்துவமனையைச் சேர்ந்த தடயவியல் மருத்துவ பிரிவின் மருத்துவர் S. சரவணன் சாட்சியம் அளிக்கையில் சூசைமாணிக்கம் உடலை சவப்பரிசோதனை செய்ததில் அவரின் நுரையீரலில் நீர் கசிவு ஏற்பட்டு இருந்ததாக குறிப்பிட்டார்.