ஒரு தொடக்கப்பள்ளி தற்காலிமாக மூடுவதற்கு உத்தரவு

ஜொகூர் , செப்டம்பர் 10-

ஜோகூர் பாருவில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் 21 மாணவர்களுக்கு திடீரென்று குமட்டல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்நது அப்பள்ளி தற்காலிகமாக மூடப்படுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளியின் வெளிவளாகத்திலிருந்து கடுமையான துர்நாற்றம் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

தற்போதைக்கு ஜோகூர்பாரு, கம்போங் மஜு தொடக்கப்பள்ளி மட்டுமே மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில கல்வி மற்றும் தகவல் பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினர் அஸ்னான் தமின் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS