Flying Fox நடவடிக்கையில் பீதியில் மாதுவும், பிள்ளையும்

ஷா ஆலம், செப்டம்பர் 10-

Flying Fox நடவடிக்கையின் போது கம்பியில் சிக்கிக்கொண்ட மாதுவும் அவரின் மகளும் சுமார் 15 நிமிடம் பீதியில் மூழ்கினர். ஆகாயத்தில் 30 மீட்டர் உயரத்தில் அவர்களை நகத்தி செல்லும் கம்பியில் சிக்கிக் கொண்ட தாயும் மகளும் பயத்தில் உறைந்ததாக குறிப்பிட்டனர்.

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஷா ஆலாம் தமன் தாசிக்நீர் விளையாட்டுப் பூங்காவில் நிகழ்ந்தது. தாயும், மகளும் கம்பியில் தொங்கும் காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தன்னையும், தனது மகளையும் மீட்கும் வரையில் ஆகாய கம்பியில் தொங்கிய அமலியா என்று மட்டுமே தன்னை அடையாளம் கூறிக்கொண்ட அந்த மாது, அந்த 15 நிமிடம் வரையில் தன்னைத் தானே ஆறுதல் படுத்திக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS