கோலா சிலாங்கூர் , செப்டம்பர் 10-
கடந்த வாரம் புதன்கிழமை கோலசிலாங்கூர் வட்டாரத்தில் ஐந்து வயது சிறுமியை சித்ரவதை செய்ததாக நம்பப்படும் மாதுவும், அவரின் காதலனும் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு கோலசிலாங்கூர், செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கின்றனர்.
32 வயது நபரும் 26 வயது பெண்ணும் 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்படவிருக்கின்றனர் எஎன்று கோலசிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் முகமது அம்பியா நோர்டின் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட தகாதல் ஜோடிக்கு எதிரான விசாரணை அறிக்கை ஷா ஆலாமில் உள்ள பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.