கோலாலம்பூர், செப்டம்பர் 10-
சமயம், இனம், அரச பரிபாலனம் ஆகியவற்றை உட்படுத்தியுள்ள 3R விவகாரம் குறித்து பேசுவதற்கு அரசாங்கம் அனுமதி மறுக்கிறது என்று எதிர்க்கட்சியினர் கூறி வரும் குற்றச்சாட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.
3R விவகாரம் குறித்து பேசலாம். ஆனால், அதனை சரியான மற்றும் பொருத்தமான தளத்தில் பேசுவதற்கு இன்னமும் அனுமதிக்கப்படுவதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
ஆனால், இனங்களுக்கு இடையில் மோதல்கள் அல்லது வன்முறைகள் ஏற்படும் அளவிற்கு அச்சுறுத்தும் தன்மையில் பேசுவதற்கு ஒரு போதும் அனுமதியில்லை என்பதை பிரதமர் தெளிவுபடுத்தினார்.