நஜீப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

கோலாலம்பூர், செப்டம்பர் 10-

சிறையில் இருந்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், முழுங்கால் வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நஜீப்பிற்கு எதிராக தற்போது கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் 1MDB வழக்கு விசாரணையின் போது இவ்விவகாரம் தெரிவிக்கப்பட்டது.

நஜீப் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு நாள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறி, அதற்கான சான்றிதழ் நீதிமன்றதில் சமர்ப்பிக்கப்பட்டது..

இதனைத் தொடர்நது நஜீப்பிற்கு எதிரான 1MDB வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS