புத்ராஜெயா,செப்டம்பர் 10-
நாட்டின் அரசு நிர்வாக நகரான புத்ராஜொவில் இவ்வாண்டு இறுதிக்குள் ஓட்டுநர் இல்லாத தானியங்கி மின்சாரப் பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்படவிருகிறது. இதற்கான பரீட்சார்த்த சோதனைகள் தற்போது அமல்படுத்தப்பட்ட வருகின்றன.
5G இணையச் சேவைவைய வழங்கி வரும் Digital Nasional Berhad நிறுவனமும், eMooVit Technology Sdn. Bhd. நிறுவனமும் கூட்டாக இணைந்து இந்த பரீட்சார்த்த முறையிலான சேவையை மேற்கொண்டு வருகின்றன.
இந்த தானியங்கி பேருந்துக்குள் இணையச் சேவை, வாகனத்தின் தூரக் கட்டுப்பாடு, நேரம் உட்பட அதன் பயணச் சேவையைத் திரட்டுவதும் இந்த 5G இணையப் பயன்பாட்டில் உள்ளடங்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரீட்சார்த்த சேவையை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் மற்றும் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.