ரசாயன துர்நாற்றம் காரணமாக 3 பள்ளிகள் மூடப்பட்டன

ஜொகூர் , செப்டம்பர் 10-

ஜோகூர் மாநிலத்தில் ரசாயன நெடி துர்நாற்றம் காரணமாக இன்று மூன்று பள்ளிகள் மூடப்பட்டன.

ஜோகூர்பாருவில் மஜு ஜெயா தேசிய தொடக்கப்பள்ளி, ஹிதாயா இஸ்லாமிய தொடக்கப்பள்ளி மற்றும் ஹிதாயா இஸ்லாமிய இடைநிலைப்பள்ளி ஆகியவையே மூடப்பட்ட பள்ளிகளாகும் என்று ஜோகூர் மாநில கல்வி மற்றும் தகவல் பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினர் அஸ்னான் தமின் தெரிவித்தார்.

மஜு ஜெயா தேசிய தொடக்கப்பள்ளியில் நேற்று 21 மாணவர்களுக்கு திடீரென்று குமட்டல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்பள்ளி மூடப்படுவதற்கு உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று மேலும் இரண்டு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

WATCH OUR LATEST NEWS