காதல் ஜோடிக்கு இரண்டு ஆண்டு சிறை

கோலா சிலாங்கூர் , செப்டம்பர் 10-

தனது சொந்த பெண் பிள்ளையை காதலனுடன் சேர்ந்து, சித்ரவதை செய்த குற்றத்திற்காக மாது ஒருவருக்கும், அவரின் காதலனுக்கும் கோலசிலாங்கூர், செஷன்ஸ் நீதிமன்றம் இன்று இரண்டு ஆண்டு சிறைத் தண்டனைவிதித்தது.

நோர் அரசில்லா ஆர்டி என்ற 32 வயது மாதுவும், முகமது அமீர் ரோஸ்டி என்ற 26 வயது ஆடவரும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தனித்தனியாக நிறுத்துப்பட்டு, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

தனது கணவரை விவாகரத்து செய்து விட்ட அந்த மாது, தனது ஐந்து வயது பெண் பிள்ளையை , தனது காதலனுடன் கூட்டாக சேர்ந்த உடலில் சுடு நீரை ஊற்றியது, அடித்து துன்புறுத்தியது உட்பட மிக கொடூரமாக சித்ரவதை செய்து வந்ததாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது. அவரின் காதலனுக்கும் இதே குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

அவ்விருவரும் கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதியிலிருந்து செப்டபம்ர் 4 ம் தேதி வரை கோலசிலாங்கூர், ஜாலான் தேசிரன் மெலாவதி என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS