ஜொகூர், செப்டம்பர் 10-
பள்ளி பேருந்தில் தனது நேசத்திற்குரிய தொடக்கப்பள்ளி மாணவிகளை வீடியோ படம் எடுத்ததாக கூறப்படும் பேருந்து ஓட்டுநர் ஒருவர் , நான்கு வயது மாணவியிடம் பாலியல் வன்கொடுமை புரிந்ததாக ஜோகூர், மூவர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
24 வயதுடைய அந்த பேருந்து ஓட்டுநர், நீதிபதி சயானி முகமது நார் முன்னிலையில் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்ட போது, துயரத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் கண்ணீர் வடித்தார்.
2024 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் ஜோகூர், குளுவாங், சிம்பாங் ரெங்கம் பகுதியில் தனது பேருந்தில் பயணம் செய்த தொடக்கப்பள்ளி மாணவிகளை விடியோவில் படம் எடுப்பதை அந்த ஓட்டுநர் வழக்மாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரின் பேருந்தில் பயணம் செய்த தனது உறவுக்காரரின் நான்கு வயது சிறுமியின் உதட்டில் முத்தமிட்டு பாலியல் நோக்கத்துடன் நடந்து கொண்டதாக அந்த பேருந்து ஓட்டுநருக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித்தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த பேருந்து ஓட்டுநர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து அவர் விசாரணைக் கோரினார்