ராஜா பெட்ரா- மறைவுக்கு பிரதமர் அன்வார் அனுதாபம்

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 10-

பிரபல வலைப்பதிவு எழுத்தாளரும், அரசியல் ஆய்வாலருமான ராஜா பெட்ரா கமருதீன் மறைவையொட்டி அவரின் குடும்பத்தினருக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொண்டார்.

இங்கிலாந்து, மான்செஸ்டர் -ரில் 74 வயது ராஜா பெட்ரா நேற்று இரவு காலமானதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரின் குடும்பதினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

மூத்த அரசியல்வாதியான டிஏபி ரோனி கூறுகையில் நாட்டில் தேர்தல் சீரமைப்புக்குழுவான பெர்சிஹ் உருவாவதற்கு அதனை கூட்டாக சேர்ந்து அமைப்பதில் ராஜா பெட்ரா-வின் பங்களிப்பு இன்றியமையாததாகும் என்றார்.

குறிப்பாக, 2007 ஆம் ஆண்டு முதலாவது பெர்சே பேரணியில் திட்டமிடுவதில் ராஜா பெட்ரா முக்கியப் பங்காற்றினார் என்று ரோனி லியு குறிப்பிட்டார்.

டத்தோஸ்ரீ அன்வார் சிறையில் இருந்த போது, அவரை விடுவிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட பிரச்சார இயக்கத்தில் ராஜா பெட்ரா -வின் மிகப்பெரிய பங்களிப்பு இருந்துள்ளது என்பது பலருக்கு தெரியாது என்று ரோனி லியு தெரிவித்தார்.

ஒரு நிர்வாகத்தில் பின்னிருந்து செயல்படக்கூடிய வித்தியாசமான சிந்தானா சக்தியைக் கொண்ட மனிதராக ராஜா பெட்ரா திகழ்ந்திருக்கிறர் என்று ரோனி லியு வர்ணித்துள்ளார்.

பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர்வான் அஹ்மத் ஃபய்சல் வான் அஹ்மத் கூறுகையில் மலேசிய அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு எழுத்தாளராக, ஆய்வாளராக ராஜா பெட்ரா பார்க்கப்பட்டவர் என்று வர்ணித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS