பெண்டாங்,செப்டம்பர் 10-
பென்டாங், காரக் அருகில் கம்பன் சுங்கை சேர்பை – யைச் சேர்ந்த ஓர் இந்தியப் பெண், கடந்த ஆகஸ்ட 21 ஆம் தேதியிலிருந்து காணவில்லை. அவரை கண்டுபிடிப்பற்கு போலீசார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
32 வயது V. தமிழரசி என்ற அந்தப் பெண், காணாதது குறித்து அவரின் சகோதரர் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி காலை 10.33 மணியளவில் போலீசில் புகார் செய்து இருப்பதாக பென்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் சைஹாம் முகமது கஹர் தெரிவித்துள்ளார்.
நடுத்தர உடல்வாகு அமைப்பை கொண்ட தமிழரசி, 165 செண்டிமீட்டர் உயரம் கொண்டவர். திருமணமானவரான தமிழரசி, ஆகக்கடைசியாக சிவப்பு நிற டி சட்டை மற்றும் நீல ஜீன்ஸ் காற்சட்டையில் கரக் அருகில் கம்போங் சுங்கை சேர்பை- யில் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
தமிழரசியை பார்த்தவர்கள் அல்லது அவரைப் பற்றி தகவல் கொண்டுள்ளவர்கள், அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலோ அல்லது 09- 2231999 என்ற எண்ணில் பெந்தோங் போலீஸ் தலைமையகத்திலோ தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.