குற்றச்சாட்டை மறுத்தார் திரேசா கொக்

கோலாலம்பூர், செப்டம்பர் 10-

Halal சான்றிதழ் மற்றும் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகாவான Jakim- மின் பங்களிப்பு குறித்து தாம் கேள்வி எழுப்பியதாகவும் / இஸ்லாமிய சமயத்தை மதிக்கவில்லை என்றும் கூறப்படுவதை டிஏபி- யைச் சேர்ந்த செபுதே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக் வன்மையாக மறுத்தார்.

Halal சான்றிதழ் விவகாரம் தொடர்பில் இன்று காலையில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் விசாரணைக்கு உட்பட்ட டிஏபி- யின் உதவித் தலைவரான தெரசா கோக் , பின்னர் நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தின் வர்த்தகம், தொழில் மற்றும் முதலீடு ஆகியவற்றுக்கான ஆட்சிக்குழு உறுப்பினராக கடந்த 2008 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டது முதல் Halal சான்றிதழை அதிகளவில் ஊக்குவித்து, விளம்பரம் செய்து வந்ததாக திரேசா கொக் குறிப்பிட்டார்.

எனினும் தனக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை நல்கியுள்ளதாக திரேசா கொக் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS