கிள்ளான் , செப்டம்பர் 10-
கிள்ளாளின் இன்று காலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் தொழிற்பயிற்சி கல்லூரியைச் சேர்ந்த மாணவன் ஒருவன் உயிரிழந்தான்..
இச்சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் ஜாலான் டெலோக் காங்- கில் நிகழ்ந்தது. 18 வயதுடைய அந்த மாணவன் செலுத்திய மோட்டார் சைக்கிள், எதிர் திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் எதிரும் புதிருமாக மோதியதாக கூறப்படுகிறது.
இதில் சாலையில் தூக்கி எறியப்பட்ட அந்த மாணவன், எதிரே வந்த கனரக லோரியின் சக்கரத்தில் அரைப்பட்டதாக நம்பப்படுகிறது.
இதில் கடுமையான காயங்களுக்கு ஆளான அந்த மாணவன், சம்பவ இடத்திலேயே மாண்டதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஜாலான் டெலோக் காங் தெரிவித்தார்.
மேலும் கடுமையான காயங்களுக்கு ஆளான 20 வயதுடைய மற்றொரு மோட்டார் சைக்கிளோட்டி, கிள்ளான், தேங்கு அம்புவான் ரஹிமா மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட மாணவன் லோரியின் அடியில் சிக்கி, உயிரிழந்திருப்பதை உணராமல் சென்று இருக்கலாம் என்று நம்பப்படும் லோரி ஓட்டுநரை போலீசார் தேடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.