72 வயது முதியவரின் உடல் கண்டு பிடிப்பு

கோலாலம்பூர், செப்டம்பர் 10-

கோலாலம்பூர், கெப்போங்கில் ஓர் அடுக்கமாடி வீட்டில் முதியவர் ஒருவரின் எலும்புக்கூடு கண்டு பிடிக்கப்பட்டது.

சில நாட்களாக தனது தந்தை தம்முடன் தொடர்பு கொள்ளாததைக் கண்டு சந்தேகித்த ஆடவர் ஒருவர், தனது தந்தையைப் பார்ப்பதற்கு வீட்டிற்கு வந்த போது, வீடு உள்ளிருந்து பூட்டப்பட்டு இருப்பதை கண்டு சந்தேகித்துள்ளார்.

வீட்டின் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்த போது தனது தந்தையின் எலும்புக்கூடு மட்டுமே மிஞ்சிருந்ததைக் கண்டு போலீசுக்கு தகவல் அளித்துள்ளார்.

72 வயதுடைய அந்த முதியவர், தனது மனைவியை விட்டு பிரிந்தப் பின்னர் தனியொரு நபராக அந்த வீட்டில் வசித்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மத் சுகர்னோ முகமட் ஜஹாரி தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS