போதைப்பொருளுடன் மலேசியப் பிரஜை கைது

சிங்கப்பூர்,செப்டம்பர் 10-

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் மலேசியப் பிரஜை ஒருவரை சிங்கப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

34 வயதுடைய அந்த மலேசியப் பிரஜை, மூன்று லட்சத்து 5 ஆயிரம் வெள்ளி சிங்கப்பூர் பண மதிப்பில் 5 கிலோ போதைப்பொருளுடன் பிடிபட்டுள்ளார் என்று சிங்கப்பூர் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை இரவு சிங்கப்பூர், சின் ஸ்வீ சாலை சாலையில் அந்த மலேசியப் பிரஜையின் காரை மடக்கி அதிகாரிகள் சோதனையிட்ட போது காருக்குள் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதாக அந்த ஏஜென்சி தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS