ஜோகூர்பாருவில் ரசாயன மாசுபாடு, இருவர் கைது

ஜொகூர் , செப்டம்பர் 10-

ஜோகூர்பாரு வட்டாரத்தில் ரசாயன துர்நாற்ற மாசுபாடு தொடர்பில் போலீசார் ஒரு லோரி ஓட்டுநரையும், உதவியாளரையும் கைது செய்துள்னர்.

உள்ளூரைச் சேர்ந்த 23 மற்றும் 28 வயது மதிக்கத்தக்க அந்த இரு நபர்களும் நேற்று இரவு 11 மணியளவில் ஒரு வீடமைப்புப்பகுதியில் கைது செய்யப்பட்டதாக ஜோகூர்பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவுப் செலமட் தெரிவித்தார்.

அந்த லோரி ஓட்டுநரும், உதவியாளரும் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி கோத்தா திங்கி, பாசிர் இந்தான் பூர்வகுடி கிராமத்திற்கு அருகில் லிங்கி ஆற்றில் ரசாயன கழிவுப்பொருட்களை கொட்டியதாக நம்பப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

ஆற்றில் கொட்டப்பட்ட ரசாயன நெடியின் துர்நாற்றம், அருகில் உள்ள கிராமங்களையும் சூழ்ந்துக்கொண்டதால் மக்கள் மயக்கம் மற்றும் குமுட்டலக்கு ஆளாகினர்.

தவிர தாமன் தயா, மவுண்ட் ஆஸ்டின் மற்றும் தாமன் இஸ்திமேவா ஆகிய மூன்று வீடமைப்புப்பகுதிகளிலும் ரசாயன நெடி, கடும் பாதிப்பை ஏற்படுத்தியதாக ஏசிபி ரவுப்சுட்டிக்காட்டினார்.

WATCH OUR LATEST NEWS