ஷா ஆலம், செப்டம்பர் 10-
அண்மையில் முதலை ஒன்று பிடிபட்டது மூலம் மக்களின் பெரும் அச்சத்திற்கு உட்பட்ட பகுதியாக மாறியுள்ள ஷா ஆலாம், செக்ஷன் 7 இல் உள்ள ஏரிப்பூங்கா, முதலையிடமிருந்து விடுப்பட்ட ஒரு பாதுகாப்பான பகுதியாகும் என்று வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்கா இலாகாவான PERHILITAN உறுதி அளித்துள்ளது.
அந்த ஏரிப்பூங்காவின் பாதுகாப்பு குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று அந்த வன விலங்குப் பூங்காவின் சிலாங்கூர் மாநில இயக்குநர் வான் முகமது அடிப் வான் யூசோ தெரிவித்துள்ளார்.
அந்த ஏரிப்பூங்காவில் படகு வாயிலாகவும் ட்ரோன் மூலமாகவும் இரவு முழுவம் அணுக்கமாக கண்காணித்ததில் முதலை உட்பட இதர கொடிய ஊர்வனங்கள் அந்த ஏரிப்பூங்காவில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.