கோலாலம்பூர், செப்டம்பர் 10-
வரும் 28 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர், மஹ்கோட்டா சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் அம்னோ வேட்பாளருக்கு உதவும் வகையில் டிஏபி பிரச்சாரம் மேற்கொள்ளும் என்று அக்கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவி தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.
Halal விவகார சர்ச்சையில் அம்னோவிற்கும், டிஏபி – க்கும் கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் இந்த இடைத் தேர்தலில் அம்னோ வேட்பாளருக்கான தேர்தல் பிரச்சாரத்தில் டிஏபி தனது பங்களிப்பை தொடர்ந்து வழங்கும் என்று தொடர்புத்துறை துணை அமைச்சரான தியோ நீ சிங் குறிப்பிட்டார்.
ஹலால் சான்றிதழ் விவகாரத்தில் இரு கட்சிகளும் மாறுப்பட்ட கருத்துக்களை கொண்டிருக்கலாம். ஆனால் டிஏபி , அம்னோ, பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் உறவில் அது பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூலாய் நாடாளுமன்ற உறுப்பினரான தியோ நீ சிங் தெரிவித்தார்.