புத்ராஜெயா,செப்டம்பர் 10-
டத்தோ அந்தஸ்தைத் கொண்ட அமைச்சு ஒன்றின் மூத்த அதிகாரி ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.
4 லட்சம் வெள்ளி அரசாங்க நிதி முறைகேடு தொடர்பில் 50 வயது மதிக்கத்தக்க அந்த உயர் அதிகாரி, SPRM விசாரணைக்கு ஆளாகியுள்ளார்.
அந்த உயர் அதிகாரியை வரும் வெள்ளிக்கிழமை வரையிலும், அவருடன் சேர்ந்து கைது செய்யப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க நபரை நாளை புதன்கிழமை வரையிலும் தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற ஆணையை SPRM பெற்றுள்ளது.
இவர்களுடன் சேர்ந்து 40 வயது மதிக்கத்தக்க அரசாங்க ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் அந்த நபர், விசாரணைக்குப் பின்னர் SPRM ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.