கோலாலம்பூர், செப்டம்பர் 11-
Halal சான்றிதழ் விவகாரம் தொடர்பில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் விசாரணைக்கு ஆளாகியுள்ள செபுதே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக் விவகாரம், சில தரப்பினர் குற்றஞ்சாட்டுவதைப் போல அது 3R விவகாரம் அல்ல என்று டிஏபி தலைவர் லிம் குவான் எங் இன்று தெளிவுபடுத்தினார்.
தெரசா கோக் – க்கின் வாதமானது சமயம், இனம் மற்றும் அரச பரிபாலனம் சம்பந்தப்பட்ட 3R விவகாரத்தை உட்படுத்தியது அல்ல. மாறாக, உணவகங்களுக்கு Halal சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டால் அது பெரும்பாலான வியாபாரிகளுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி விடும் என்ற நோக்கத்திலேயே அது குறித்து அவர் பேசியதாக லிம் குறிப்பிட்டார்.
புக்கிட் அமான் போலீஸ் விசாரணைக்கு இன்று காலையில் அழைக்கப்பட்ட திரேசா கொக்கிற்கு தனது ஆதரவைப் புலப்படுத்தும் வகையில் கட்சி உறுப்பினர்களுடன் புக்கிட் அமானுக்கு திரண்ட லிம், செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் இதனை தெரிவித்தார்.