தாய்லாந்தின் புதிய பிரதமருக்கு அன்வார் வாழ்த்து

கோலாலம்பூர், செப்டம்பர் 10-

தாய்லாந்தின் புதிய பிரதமராக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்ட Paetongtarn Shinawatra- விற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது வாழ்ததுகளை தெரிவித்துக்கொண்டார்.

தாய்லாந்து பிரதமருடன் இன்று மாலையில் தொலைபேசியில் பேசிய டத்தோஸ்ரீ அன்வார், தாய்லாந்தின் 31 ஆது பிரதமராக தேர்வு செய்யப்பட்டதற்காக மலேசியா சார்பில் தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டார்.

அண்டை நாடுகள் என்ற முறையில் மலேசியாவும் தாய்லாந்தும் பலவிதமான ஒத்துழைப்பின் அடிப்படையில் பொதுவான அம்சங்களை பகிர்ந்து வருகினறன. இந்நிலையில் தாய்லாந்திற்கு தலைமையேற்றுள்ள பெண் பிரதமரான Paetongtarn Shinawatra- மூலம் அந்த நாடு பல உயரங்களை எட்டுவதற்கு தமது வாழ்த்துகள் உரித்தாகுக என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS