பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 10-
லஞ்ச ஊழல் விசாரணையின் ஒரு பகுதியாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் அஹ்மத் ஜாஃபிர் யூசோஃப் – பை தாங்கள் கைது செய்யவிருப்பதாக வெளிவந்துள்ள தகவலை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM மறுத்துள்ளது.
40 லட்சம் வெள்ளி லஞ்சப்பணம் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் போலீஸ் துறையின் செய்தி தொடர்பு அதிகாரி ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளதாக ஈடிசி சியாசாட் வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் SPRM தலைமை ஆணையம் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி கருத்துரைத்துள்ளார்.
நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் அஹ்மத் ஜாஃபிர் உட்பட அந்த மாநிலத்தின் சில மாவட்ட போலீஸ் தலைவர்களும் கைது செய்யப்படலாம் என்று ஈடிசி சியாசாட் செய்தி வெளியிட்டு இருந்தது.
இது தொடர்பாக கருத்தரைத்த ஆசம் பாக்கி , அந்த தகவலில் உண்மையில்லை என்றும் அது பொய் செய்தி என்றும் குறிப்பிட்டுள்ளார்.