லியான்யுங்காங், செப்டம்பர் 10-
எல்லைத் தாண்டிய குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு மலேசியாவுடனான இரு தரப்பு ஒத்துழைப்பில் சீனா தனது உயர் நிலை அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
இன்று சீனா, ஜியாங்சு -வில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான லியான்யுங்காங் உலகளாவிய பொது பாதுகாப்பு ஒத்துழைப்பு மன்றத்தின் ஆய்வரங்கையொட்டி, சீனாவின்
பொது பாதுகாப்பு அமைச்சர் Wang Xiaohong- குடன் நடத்தப்பட்ட சந்தப்புக்கு பின்னர் அகமட் ஜாஹிட் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் பலதரப்பட்ட முக்கிய விஷயங்களை தாங்கள் பேசியதுடன் எல்லைத்தாண்டிய குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் பேசப்பட்டதாக அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.