செரம்பன், செப்டம்பர் 10-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM- மினால் மாநில போலீஸ் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவதை போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் மறுத்துள்ளார்.
மாநில தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுவதில் உண்மையில்லை. இது குறித்து SPRM- முடன் தொடர்பு கொண்டு ஆராய்ந்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று உறுதி செய்யப்பட்டதாக ஐஜிபி குறிப்பிட்டார்.
போலீஸ் படையின் தோற்றத்திற்கு களங்கத்தை விளைவிக்கும் தன்மையிலான இது போன்ற வீண் வதந்திகளை பகிர வேண்டாம் என்று டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் பொது மக்களை கேட்டுக்கொண்டார்.