கோலாலம்பூர், செப்டம்பர் 11-
கடந்த திங்கட்கிழமை 30 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்றின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக கூறப்படும் தாதி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
22 வயதுடைய அந்த தாதி, கிளந்தான், கோத்தாபாரு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, அவருக்கான தடுப்புக்காவல் அனுமதியை போலீசார் பெற்றனர்.
பராமரிப்பு மையம் ஒன்றில் தனது கவனிப்பில் விடப்பட்ட அந்தக் குழந்தைக்கு தாதியர் கொடுத்த பாலை குடித்தப்பின்னர் அந்த குழந்தை சுயநினைவு இழந்த நிலையில் மரணமுற்றதாக கூறப்படுகிறது.
தற்போது அந்த தாதி, 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக கோத்தா பாரு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ரோஸ்டி தாட் தெரிவித்தார்.