கோத்தா திங்கி ,செப்டம்பர் 11-
ஜோகூர், கோத்தா திங்கி, கோட்டா திங்கி கழிவு நீர் சுத்திரிப்பு மையத்தில் மண்டை ஓட்டுடன் மனித எலும்புக்கூடும் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது..
அந்த கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட குத்தகையாளர் ஒருவரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த மனித எலும்புக்கூடு கண்டு பிடிக்கப்பட்டதாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் யூசப் ஓத்மான் தெரிவித்தார்.
மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்ட அந்த கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு விரைந்த ஜோகூர் போலீஸ் தலைமையகத்தின் தடயவியல் போலீசார், நீரோடு நீராக காணப்பட்ட அந்த அந்த மனித எலும்புக்கூடு குறித்து பரிசோதனை செய்தாக அவர் குறிப்பிட்டார்.
அந்த மனித எலும்புக்கூட்டை சாக்கடை நீரிலிருந்து மீட்பதற்கு தடயவியல் போலீஸ் பிரிவுக்கு தீயணைப்பு, மீட்புப்படை உதவியதாக யூசப் ஓத்மான் குறிப்பிட்டார்.
ஒரு மண்டை ஓடு, நீளமான 7 எலும்புத் துண்டுகள், இரண்டு விலா எலும்புகள், சிறிது தலைமுடி ஆகியவை மீட்கப்பட்டள்ளதாக அவர் தெரிவித்தார்.
தடயவியல் பரிசோதனைக்காக அந்த மனித எலும்புக்கூடு, ஜோகூர்பாரு, சுல்தானா அமினா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.