கோலாலம்பூர், செப்டம்பர் 11-
இந்தியப் பிரஜை விஜயலெட்சுமி, ஆள்விழுங்கிய குழியில் விழுந்து காணாமல் போன சம்பவத்தைத் தொடர்ந்து கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியா வர்த்தகப்பகுதியின் பாதுகாப்பு குறித்து மக்கள் மத்தியில் கேள்வி எழுந்து வரும் வேளையில் அந்தப்பகுதியில் வருகையாளர்களை ஈர்க்க முனைப்பு காட்டப்படும் என்று கோலாலம்பூர் மாநகர் மன்றமான DBKL அறிவித்துள்ளது.
நூற்றாண்டு கால பழமை வாய்ந்த ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் வியாபார நடவடிக்கைகளை மீட்சிப்பெறச் செய்வதற்கு உரிய நடவடிக்கையை DBKL முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது.
ஜாலான் மஸ்ஜிட் இந்தியா வருகையாளர்களுக்கு பாதுகாப்பான பகுதி என்பதை உறுதி செய்வதற்கு அண்மையில் ஏற்பட்ட நில அமிழ்வுக் காரணமாக பழுதடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகளை தற்போது DBKL மேற்கொண்டு வருவதாக அது தெரிவித்துள்ளது.