Yusoff Rawther கைது செய்யப்பட்டார்

புத்ராஜெயா,செப்டம்பர் 11-

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் முன்னாள் ஆய்வியல் உதவியாளர்முஹம்மது யூசுப் ராவ்தர், போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் யூசுப் ராவ்தர், போலீசாரின் தடுப்புக் காவலில் இருப்பதாக அவரின் வழக்கறிஞர் முஹம்மது ரபீக் ரஷீத் அலி தெரிவித்துள்ளார்.

யூசுப் ராவ்தர் பயணம் செய்த காரில் இரண்டு துப்பாக்கிகள் மற்றும் 305 கிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர் என்று அந்த வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டம் மற்றும் 1960 ஆம் ஆண்டு சுடும் ஆயுதம் சட்டம் ஆகியவற்றின் கீழ் அந்த நபர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

காரில் காணப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருள் தனக்கு சொந்தமானவை அல்ல என்றும், அவற்றுக்கும், தனக்கும் எவ்வித தொடர்பில்லை என்றும் யூசுப் ராவ்தர், வாதிட்டு வருகிறார் என்று வழக்கறிஞர் Muhammad Rafique விளக்கம் அளித்துள்ளார்.

ஏற்கனவே ஊடகங்களில் வெளிவந்துள்ள தகவலின்படி பிரதமருக்கு எதிராக யூசுப் ராவ்தர், தொடுத்துள்ள பாலியல் தொடர்புடைய வழக்கு, அடுத்த ஆண்டு ஜுன் 16 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

WATCH OUR LATEST NEWS