புத்ராஜெயா,செப்டம்பர் 11-
நாட்டில் மழலையர் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று கல்வி சமூகவியல் வல்லுநர் ஒருவர் அரசாங்கத்திற்கு இன்று பரிந்துரை செய்துள்ளார்.
2024- 2025 கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ள மாணவர்களில் 25 விழுக்காட்டினர் அல்லது ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 062 சிறார்கள் , 3 M என்று சொல்லப்படும் வாசிப்பு, எழுத்து, கணிதம் ஆகியவற்றில் திறனை கொண்டிருக்கவில்லை என்று அம்பலமாகியிருப்பதைத் தொடர்ந்து அம்மாணவர்களின் நிலை கவலை அளிப்பதாக உள்ளது என்று கல்வி சமூகவியல் வல்லுநர் அனுவார் அகமது தெரிவித்துள்ளார்.
ஐந்து, ஆறு வயதுடைய அனைத்து சிறார்களுக்கு கட்டாய மழலையர் கல்வி வழங்கப்படாத நிலையில் ஒன்றாம் ஆண்டில் 3M- மில் பின்தங்கியுள்ள மாணவர்களை மற்ற மாணவர்களிடமிருந்து தனியாக பிரித்து, குறைநீக்க கல்வியை வழங்குவது என்பது எந்த வகையிலும் நியாயமில்லை என்று அனுவார் அகமது குறிப்பிட்டுள்ளார்.
மலேசியாவில் மழலையர் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்குமானால், ஒன்றாம் ஆண்டில் காலெடுத்து வைக்கும் மாணவர்கள் 3M- மில் குறைந்த பட்சம் ஆளுமையை கொண்டிருப்பதற்கு சாத்தியம் உள்ளது என்று அனுவார் அகமது அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.