ஈப்போ , செப்டம்பர் 11-
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டிஜிட்டல் பியானோ சாதனம் வாங்குவதற்கு போலி ஆவணத்தை பயன்படுத்திய குற்றத்திற்காக பள்ளி தலைமையாசிரியர் ஒருவருக்கு ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 10 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.
57 வயது ரோஸ்னா மாட் ஜைன் என்ற அந்த தலைமையாசிரியர், நீதிபதி டத்தோ இப்ராஹிம் ஒஸ்மான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி கீழ் பேரா மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் அந்த பெண் தலைமையாசிரியர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 465 பிரிவின் கீழ் அந்த தலைமையாசிரியர் குற்றஞ்சாட்டப்பட்டார்.
எனினும் தனக்கு எதிரான குற்றத்தை அந்த தலைமையாசிரியர் ஒப்புக்கொண்டார்.