பதங் பெசார் ,செப்டம்பர் 11-
சீன தேயிலைப்பொட்டலங்களை மறைத்து வைக்கப்பட்ட 73.319 கிலோ எடைக்கொண்ட 23 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள சியாபா வகையைச் சேர்ந்த போதைப்பொருளை கடத்தி வரும் முயற்சியை மலேசிய சுங்கத்துறை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
இம்மாதம் முற்பகுதியில் பதங் பெசார் குடிநுழைவு, சுங்கம் மற்றும் நோய்த்தடுப்பு சோதனை மையத்தின் கட்டட வளாகத்தில் அந்தப் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பெர்லிஸ் மாநில இயக்குநர் இஸ்மாயில் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தில் பதிவு செய்யப்பட்ட இசுசு வாகனத்தை சுங்கத்துறையினர் சோதனையிட்ட போது சீன தேயிலைப் பொட்டலங்களில் மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.