ஜப்பானியரிடம் கொள்ளை, மூன்று அந்நிய நாட்டர்வர்கள் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், செப்டம்பர் 11-

கோலாலம்பூர் மாநகரில் ஜப்பானியர் ஒருவரை மடக்கி, 30 ஆயிரம் அமெரிக்க டாலர் பணத்தை கொள்ளையிட்டதாக மூன்று அந்நிய நாட்டவர்கள் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

சியரா லீன் நாட்டைச் சேர்ந் இரு நபர்களான 34 வயது பேட்ரிக் சம்பா, 36 வயது இப்ராஹிம் ஜல்லோ மற்றும் லைபீரியா நாட்டைச் சேர்ந்த 38 வயது டக்ளஸ் டேனியல் டெவின் ஆகிய மூன்று நபர்கள், கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் கோலாலம்பூர், Mid Valley, The Gardends Mall பேரங்காடியில் உள்ள ஓர் உணவகத்தில் ஒரு ஜப்பானிய பிரஜையான 58 வயது Hiroyuki Azuma என்பவரிடமிருந்து 30 ஆயிரம் டாலரை கொள்ளையிட்டதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் மூன்று நபர்களும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS