ஷா ஆலம், செப்டம்பர் 11-
அம்னோ முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான கைரி ஜமாலுதீன், நாட்டின் பிரதமராகுவதற்கு லட்சியம் கொண்டிருந்தால், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடமிருந்து கற்றக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் சட்டத்துறை தலைவர் ஜெய்த் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.
கைரி, மிக கவனமாக கையாண்டு வருகின்ற சில அணுகுமுறைகள், அவர் பிரதமராகுவதற்கான வாய்ப்புகளை தடுக்கலாம் என்று முன்னாள் கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினரான ஜெய்த் இப்ராஹிம்குறிப்பிட்டார்.
நாட்டின் பிரதமராகுவதற்கு பொருத்தமான தோற்றத்தை கைரி கொண்டுள்ளார். பெண் வாக்காளர்கள் மத்தியில் அவர் பிரபலமாக விளங்குகிறார். அம்னோ உயர்மட்டத் தலைவர்களுக்கு சவால் விடும் நிலையில் உள்ளார். ஆனால், பகுத்தாய்வதில் சில நடவடிக்கைகளை அவர் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று ஜெய்த் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
கிடைக்கக்கூடிய ஒரு நீண்ட கால பலாபலன்களுக்காக சில அபாயங்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்று கைரிக்கு, Zaid Ibrahim அறிவுறுத்தினார்.