நீர்நாய் தாக்கியதில் மாது படுகாயம் அடைந்தார்

கோத்தா கினபாலு, செப்டம்பர் 11-

சபா, தஞ்சூங் அரு-வில் உள்ள ஒரு பொழுது போக்கு பூங்காவில் நீர்நாய்களின் தாக்குதலுக்கு ஆளானதாக நம்பப்படும் மாது ஒருவர் படுகாயம் அடைந்தார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பூர்வாங்க விசாரணை மேற்கொண்ட சபா வனவிலங்கு இலாகா, அந்த நீர் நாய்கள், உணவுத் தேடி, அந்த பொழுது போக்கு பூங்காவின் குளங்களை நோக்கி கூட்டமாக நுழைந்த போது, இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

அந்த பூங்காவிற்கு வருகை புரியும் பொது மக்கள், உணவு வழங்கியதன் காரணமாகவே அந்த நீர் நாய்கள் கூட்டம் கூட்டமாக அந்த பூங்காவை நோக்கி படையெடுக்கத் தொடங்கியிருப்பதாக அதன் இயக்குநர் ரோலண்ட் ஆலிவர் நியம் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS