கோலாலம்பூர், செப்டம்பர் 11-
Halal சான்றிதழ் விவகாரத்தில் தம்முடைய அறிக்கையை திசைதிருப்பி, சர்ச்சையாக்கியதாக கூறி, அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மல் சலே -விடமிருந்து 2 கோடியே 50 லட்சம் இழப்பீடு கோரி, டிஏபி செபுதே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக், இன்று வழக்கறிஞர் நோட்டீஸை அனுப்பியுள்ளார்.
தமது வழக்கறிஞர் சங்கர நாயர், வழக்கறிஞர் நிறுவனத்தின் மூலமாக இந்த நோட்டீஸை திரேசா கொக் அனுப்பியுள்ளார்.
எவ்வித காலதாமதமின்றி, தம்முடைய கேள்விகளுக்கு அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் பதில் அளிக்க வேண்டும் என்று டிஏபி -யின் உதவித் தலைவரான திரேசா கொக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தம்முடைய வழக்கறிஞர் நோட்டீசுக்கு அடுத்த 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்மல் சலே – விற்கு திரேசா கொக் நினைவுறுத்தியுள்ளார்.