பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 11-
15 வயது பெண், வீடுயின்றி, நடைப்பாதையில் உறங்கிக்கொண்டு இருந்த நபரின் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சம்பவம் தொடர்பில் 50 வயது மதிக்கத்தக்க அந்த நபருக்கு ஜோகூர், செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 5 ஆண்டு சிறை மற்றும் ஒரு பிரம்படித் தண்டனை விதித்தது.
ஹோ கெக் சுங் என்ற அந்த நபர், இக்குற்றத்தை கடந்த ஜுலை 31 ஆம் தேதி மாலையில் குளுவாங்கில் இரவு சந்தை சந்தைக்கு அருகில் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்த அன்று, 15 இளம் பெண், தனது தாயாருடன், சந்தைக்கு வந்துள்ளார். அப்போது தனது தாயாருக்கும், அந்தப் பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட சிறு வாக்குவாதத்தின் போது, தாம் சந்தைக்கு வரவில்லை என்று கூறிவிட்டு அந்தப்பெண் வீடு திரும்புவதாக கூறி அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த நபர், அந்தப் பெண்ணை இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளார் என்று குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.