குளுவாங் , செப்டம்பர் 11-
வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி, நடைபெறவிருக்கும் ஜோகூர், மஹ்கோட்டா சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கடும் போட்டியை கொடுக்கும் என்று பாஸ் கட்சி துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மேன் தெரிவித்துள்ளார்.
மஹ்கோட்டா சட்டமன்றத் தொகுதி, பாரிசான் நேஷனலின் பலம் பொருந்திய தொகுதி என்று கூறப்பட்டாலும், இந்த இடைத் தேர்தலில் வலுவான போட்டியை கொடுப்பதற்கு பெரிக்காத்தான் நேஷனல் தனது பலத்தை விரிவுப்படுத்தி, கடுமையாக உழைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் மீதான ஆதரவு அலை, அந்த தொகுதியில் ஏற்படவில்லை என்பதால் பாரிசான் நேஷனல் மிக எளிதாக வெற்றி பெற்றதாக அவர் கூறுகிறார்.
ஆனால், இந்த இடைத் தேர்தலில் நிலைமை அவ்வாறு இருக்காது. பெரிக்காத்தான் நேஷனல் கடும் போட்டியை கொடுக்கும் என்று துவான் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.