புதுடில்லி , செப்டம்பர் 11-
வணிகம், சுற்றுலா அல்லது சீக்கிய புனிதத் தலங்களுக்குச் செல்லும் மலேசியர்களுக்கான விசா கட்டணத்தை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.
மலேசியர்கள் இனி பாகிஸ்தான் இணைய விசா முறை மூலம் விசாவை பெற வேண்டும் என்று கோலாலம்பூரில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
குடிநுழைவு நடவடிக்கைக்கு கடப்பிதழ் மற்றும் வி.பி.ஏ மட்டுமே தேவைப்படும். கூடுதல் விவரங்களுக்கு செயலாக்கக் கட்டணம் உட்பட எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்று அது குறிப்பிட்டுள்ளது.