கோலாலம்பூர் போலீஸ் தலைவர் உறுதிப்படுத்தினார்

கோலாலம்பூர், செப்டம்பர் 11-

தனது காரில் இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தது தொடர்பில் ஆடவர் ஒருவர் புக்கிட் கியாராவில் கைது செய்யப்பட்டதை கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா உறுதிப்படுத்தினார்.

சம்பந்தப்பட்ட ஆடவரின் காரை தடுத்த போலீசார், அந்த காரை சோதனையிட்ட போது துப்பாக்கிகளும், போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த நபரை வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி வரையில் தடுத்து வைப்பதற்கான அனுமதியை போலீசார் பெற்றுள்ளதாக டத்தோ ருஸ்டி மேலும் கூறினார்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் முன்னாள் ஆய்வியல் உதவியாளர் முஹம்மது யூசுப் ராவ்தர், போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இதற்கு முன்பு அவரின் வழக்கறிஞர் முஹம்மது ரபீக் ரஷீத் அலி –யை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன..

WATCH OUR LATEST NEWS