ஷா ஆலம், செப்டம்பர் 11-
முன்னாள் பிரதமரும், பெர்சத்து கட்சியின் தலைருமான டான்ஸ்ரீ முகைதீன் யாசினுக்கு நீதி கிடைப்பதற்கான போராட்டத்தை கட்சி தொடர்ந்து முன்னெடுக்கும் என்று அதன் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் இன்று அறிவித்துள்ளார்.
அரசியல் ரீதியாக தொடுக்கப்படும் குற்றச்சாட்டுகளை பெர்சத்து முழு வீச்சில் எதிர்க்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
முகைதீன் யாசின் நாட்டின் பிரதமராக இருந்த போது ஜன விபாவா திட்டத்தில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள 4 குற்றச்சாட்டுகளையும் புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.
இதன் தொடர்பில் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றுகையில் எதிர்க்கட்சித் தலைவருமான ஹம்சா ஜைனுடின் மேற்கண்டவாறு சூளுரைத்துள்ளார்.