செரம்பன் , செப்டம்பர் 12-
சமூக நல இல்லங்களில் போலீசார் நடத்திய சோதனையில் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் மிக மோசமாக துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிடிபட்டவர்களில் 19 வயது பெண், இன்று காலையில் சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
காலை 9.00 மணியளவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மத்தியில் அந்தப் பெண் Black Maria- வில் கொண்டு வரப்பட்டார். அந்த சமூக நல இல்லத்தில் சிறார் பராமரிப்பாளராக அவர் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 50 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் அந்த இளம் பெண் குற்றஞ்சாட்டப்படவிருகிறார்.