அலோர் கஜா,செப்டம்பர் 12-
கனத்த மழையின் போது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் மீது மரம் விழுந்ததில் தலையில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மாண்டார்.
இத்துயரச் சம்பவம் இன்று காலை 6.30 மணியளவில் மலாக்கா, அலோர் கஜா, ஜாலான் பெரிண்டஸ்ட்ரியன், தொழிற்பேட்டைப் பகுதியில் நிகழ்ந்தது. சாலையில் விழுந்து கிடந்த மரத்தின் கிளைகள் மத்தியில் மோட்டார் சைக்கிளுடன் கிடந்த 18 வயது ஆடவரை, அறுவர் அடங்கிய தீயணப்பு, மீட்புப்படை வீரர்கள் மீட்டதாக ஈடுபட்டதாக அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் அஷாரி அபு சாமா தெரிவித்தார்.
அந்த நபரை மருத்துவக்குழுவினர் சோதனை செய்ததில் அவர் இறந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டது.
அந்த நபர், அலோர் காஜாவிலிருந்து தனது வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த பேரிடர் நிகழ்ந்ததாக தெரியவந்ததுள்ளது. இச்சம்பவம் 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டம் 41 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அ வர் மேலும் கூறினார்.