சட்டத்துறை அலுவலகத்தில் இன்று சமர்ப்பிக்கப்படும்

கோலாலம்பூர், செப்டம்பர் 12-

Halal சான்றிதழ் விவகாரம் தொடர்பில் செபுதே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக் – கிற்கு எதிராக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் நடத்திய விசாரணை அறிக்கை, சட்டத்துறை அலுவலகத்தில் இன்று சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

விசாரணை அறிக்கையை முறைப்படுத்துவதற்கு வாக்குமூலம் அளித்த சாட்சிகள் மீண்டும் அழைக்கப்படுவர் என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று முதல் இரண்டு நாட்களுக்குள் விசாரணை அறிக்கை சட்டத்துறை அலுலவகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விடும் என்று ஐஜிபி தெரிவித்தார்.

திரேசா கொக் – விவகாரம் தொடர்பில் நாடு தழுவிய நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வரையில் 50 போலீஸ் புகார்களை போலீஸ் துறை பெற்றுயிருப்பதாக ரஸாருதீன் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS