பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 12-
அடுத்த ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி முதல் இங்கிலாந்து உட்பட United Kingdom- மிற்கு குறுகிய கால வருகை மேற்கொள்கின்றவர்கள், தங்கள் பயணத்தை எளிமையாக்க வல்ல நிர்ணயிக்கப்பட்டுள்ள ETA எனப்படும் மின்னணு பயண அனுமதிக்கான அங்கீகாரத்தை பெற வேண்டும் என்று மலேசியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுற்றுப்பயணம் மற்றும் டிரான்சிட் பயணிகளுக்கு இந்த ETA மின்னணு பயண அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மலேசியாவிற்கான பிரிட்டிஷ் தூதரகம் அறிவித்துள்ளது.
ETA என்பது விசா இல்லாத குறுகிய கால மற்றும் பயணத்தை தொடங்குவதற்கு முன்பு குடிநுழைவு அந்தஸ்து இல்லாதவர்களின் பயண முறையாகும். இரண்டு வருட காலத்திற்கு ஒவ்வொரு பயண முறைக்கும் 6 மாத காலத்திற்கு கட்டணமாக 10 Pound Sterling கட்டணமாக விதிக்கப்படும் என்று பிரிட்டிஷ் தூதரகம் தெரிவித்துள்ளது.