கோலாலம்பூர், செப்டம்பர் 12-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் முன்னாள் ஆய்வியல் உதவியாளர் முஹம்மது யூசுப் ராவ்தர், போதைப்பொருளை கடத்தியதாக கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
மாஜிஸ்திரேட் M. அருண்ஜோதி முன்னிலையில் நிறுத்தப்பட்ட யூசுப் ராவ்தர் , 305 கிராம் போதைப்பொருளை கடத்தியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
அவர் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி காலை 10.15 மணியளவில் கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தின் Surau- முன்புறம் தனது காரில் Kanabis போதைப்பொருளை வைத்திருந்தாக யூசுப் ராவ்தர் – க்கு எதிரான குற்றச்சாட்டில் கூறப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை மற்றும் 12 பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்ட்ததின் 39 B பிரிவின் கீழ் யூசுப் ராவ்தர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
இதனிடையே அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் யூசுப் ராவ்தர் -க்கு ஜாமீன் மறுக்கப்படுவதால், இதனை எதிர்த்து தாங்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதாக யூசுப் ராவ்தர் – ரின் வழக்கறிஞர் Rafigue, நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்ககளிடம் தெரிவித்தார்.
வழக்கறிஞர் Rafique நேற்று வெளியிட்ட தகவலின்படி யூசுப் ராவ்தர், பயணம் செய்த காரில் இரண்டு துப்பாக்கிகள் மற்றும் 305 கிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறி, அவரை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவித்து இருந்தார்.